உள்நாடு

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்[VIDEO]

(UTVNEWS | AMPARA) -அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட ஒலுவில் அல்- ஹம்றா வித்தியாலய புதிய அதிபரின் நியமனத்தை நிறுத்தி, பழைய அதிபரையே நியமிக்குமாறு பெற்றோர்களும், மாணவர்களும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலம் முன்பாக இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் சிறந்த முறையில் இயங்கி வந்த இப்பாடசாலையின் நிலைமை தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான தீர்வாக புதிய அதிபர் நியமனத்தை இரத்துச் செய்து, முன்பிருந்த அதிபரையே நியமிக்க வேண்டும் என இன்று மேற்கொள்ளப்பட்ட கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை,புதிய அதிபர் நியமிக்கப்பட்டதனைக் கண்டித்து கடந்த 06ஆம் திகதி முதல் பாடசாலையை மூடி, பெற்றேர்களும் மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்திருந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையிலான கல்வி அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் பாடசாலை சமூகத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Related posts

“02 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும்” இராஜாங்க அமைச்சர்

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து – அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் – வீடியோ

editor

நாடளாவிய ரீதியான மின்துண்டிப்பு தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்