(UTV|கேகாலை ) – வரகாபொலை – கனேகம பகுதியில் வீடு ஒன்றில் இன்று(14) அதிகாலை இனந்தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாய் மற்றும் அவரது மகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.