உள்நாடு

அமில வீச்சு தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கேகாலை ) – கேகாலை – புளத்கோஹூபிட்டிய – மொரந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அமில வீச்சு தாக்குதல் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மொரந்தொட்ட பகுதியில் இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது இந்த அமில வீச்சு இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவத்தில் 8 பேர் காயமமைடைந்து கேகாலை பொது மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் அமில வீச்சை நடத்திய சந்தேகத்திற்குரிய நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

Related posts

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

இலவச டேட்டாவைப் பெற முடியும் என வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்.

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்