(UDHAYAM, COLOMBO) – புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்றவர்களின் வசதி கருதி கொழும்பு நோக்கி வருவதற்காக இம்மாதம் 27ம் திகதி வரையில் விசேட பஸ் சேவைகள் நடத்தப்படுவதாக போக்குவரத்து சபையின் போக்குவரத்துபிரிவின் பொதுமுகாமையாளர் பி.எச்.ஆர்.பி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துசபை கடந்து 6ம் திகதி முதல் 16ம் திகதிவரையிலான காலப்பகுதியில் 721 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாக பி.எச்.ஆர்.பி.சந்திரசிறி குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதியில் ஆகக்கூடுதலான வருமானத்தை ஊவா பிரதேச டிப்போ பெற்றுள்ளது. இத்தொகை 71 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடமேல் மாகாண டிப்போ 78 மில்லியன் ரூபாவினையும் சப்ரகமுவ மாகாண டிப்பேர் 67 மில்லியன் ரூபாவையும் வருமானமாக பெற்றுள்ளது.