விளையாட்டு

பதவி விலகத் தயார் – லசித்

(UTV| கொழும்பு)- தோல்விக்கு தலைமையே காரணம் எனின் தாம் விலகத் தயாராகவுள்ளதாக இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கைக் குழாம் நேற்றிரவு நாடு திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லசித் மாலிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2 இற்கு 0 என்ற அடிப்படையில் இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கட் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

தோல்விக்கு தலைமைத்துவமே காரணம் என்று சிலர் கூறினால் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதில் இருந்து விலக தயார் என இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்காகவே தான் விளையாடுவதாகவும் தன்னால் தனியாக வெற்றியீட்ட முடிந்தால் அதனையும் செய்வதாகவும் அதனை செய்யமுடியாத பட்சத்தில் விலகிச் செல்வதற்குத் தான் தயாரெனவும் இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட்அணியின் தலைவர் லசித் மாலிங்க கூறியுள்ளார்.

Related posts

மஹேலவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பதவி

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

வெடிப்புச் சம்பவத்தில் அனில் கும்ளேயும் உயிர் தப்பினார்…