உலகம்

காசிம் சுலைமானி கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.எஸ். அமைப்பு அறிக்கை

(UTV | அமெரிக்கா ) – ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.எஸ். அமைப்பு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் இராணுவத் தளபதி ஐஸ். அமைப்பினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் இராணுவத்தளபதியின் மரணம் ஆயுதமேந்திய ஜிஹாதி போராளிகளுக்கு நன்மை அளிப்பதாக ஐஸ். அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஈரான் இராணுவத் தளபதியின் இழப்பு ஐஸ். அமைப்பினருக்கு சாதகமாக அமைந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 03ம் திகதி ஈராக்கில் உள்ள பக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஈரான் இராணுவத்தளபதி காசிம் சுலைமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் தளபதி அபு மகாதி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மோடியின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு – வெளியான காரணம்

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை – எதிர்க்கும் அமெரிக்கா.

மத்திய கிழக்கு நாடுகள் – அமெரிக்கா விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்