உள்நாடு

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது

(UTV |கொழும்பு ) – சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் புத்தளம் பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நேற்று(10) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 229 சிகரட் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது

குறித்த சிகரட் பொதிகளில் காணப்பட்ட 45,800 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதிக்கு பூட்டு

இன்று முதல் நடைமுறையில் உள்ள போக்குவரத்து வசதி

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்