உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV |கொழும்பு ) – கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர் விநியோகமானது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு நீர் விநியோகத் தடை அமுற்படுத்தப்பட்டது.

கொழும்பு 13, 14 மற்றும் 15 பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை அமுற்படுத்தப்படுவதாகவும், கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்றைய தினம் தெரிவித்தது.

இந்தநிலையில் இந்த 12 மணி நேர நீர் விநியோகத் தடை இன்று காலை 10 மணிக்கு முடிவடைந்துள்ள நிலையில், சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காலி முகத்திடல் தாக்குதல் : ஐ.நா.ச வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கவலை

எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்