உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து அவரிடமே மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல – நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்தியவங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபரான அர்ஜூன மகேந்திரனை திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்குச் செல்வதாகக் குறிப்பிட்டு, அவரை நாட்டிலிருந்து வெளியேற உதவியவர் ரணில் விக்கிரமசிங்கவே எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related posts

கோதுமை மாவின் தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு

ராணியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

நசீர் அஹமட்டை கோபப்படுத்திய இடமாற்றம் என்ன? மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பதில்