உள்நாடு

பேருந்து விபத்தில் 12 பேர் பலி – மேலும் பலர் கவலைக்கிடம் [VIDEO]

(UTV|BADULLA) – பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (06) மாலை 05 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பசறை பகுதியிலிருந்து கெக்கிராவ பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பேருந்து சாரதி உட்பட 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 20ற்கும் மேற்பட்டோர் பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Related posts

தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாடு: தொழிலாளர்களுக்கு நேரடியாக சென்று தீர்வு பெற்றுக்கொடுத்த ஜீவன்

கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இன்று

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்