(UTV|IRAN) – அமெரிக்கா நடத்திய தாக்குதலில் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என ஈரானின் புதிய இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை இராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் புரட்சிகர இராணுவ தளபதியாக, காசிம் சுலைமானிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மாயில் கானி பொறுப்பேற்றுள்ளார். காசிம் சுலைமானி அமெரிக்கா வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்து பேசிய இஸ்மாயில் கானி, “சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.