உள்நாடு

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

(UTV|COLOMBO) – நாட்டின் சில பகுதிகளில் இன்று(06) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் தினைக்கால்ம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று(06) மழை பெய்யக் கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஓரளவு கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் குறித்த திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்