(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை – தம்பபிள்ளை மாவத்தை, ஐஸ்பீல்ல பகுதியில் இடம்பெற்ற இலகுரக விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு ஐந்து தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பண்டாரவளை பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளித்ததை தொடர்ந்து பண்டாரவளை நீதவான் கீர்த்தி தென்னகோனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம், இலங்கை வான்படை, வளிமண்டலவியல் திணைக்களம், பதுளை பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.