உலகம்

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி

(UTV|INDONESIA) – இந்தோனேசியாவில் இடைவிடாமல் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜகார்த்தா பிராந்தியத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மின்விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஜகார்த்தாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில ரெயில் பாதைகளும், விமான நிலையங்களும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

உலகில் பாதுகாப்பான நகரங்களில் ‘துபாய்’

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ 

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது!