கேளிக்கை

பிரபல நடிகர் மீது ஸ்ரீரெட்டி முறைப்பாடு

(UTV|COLOMBO ) – இயக்குனர்கள், பட அதிபர்கள் மீது முறைப்பாடுகள் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது பிரபல நடிகர் மீது மீடூ முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணை ‘மீ டூ’ முறைப்பாடுகள் தெரிவித்துள்ளார்.

பெண்களை மதிக்க தெரியாதவர் பவன் கல்யாண். வாழ்க்கையில் அவரால் ஒருபோதும் உயர முடியாது. அவரது ரசிகர்களுக்கு பயந்து நான் சென்னைக்கு ஓடி விட்டதாக புரளி கிளம்பி உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை.

அவரால் பாதிப்புக்கு உள்ளான 5 பெண்கள் முறைப்பாடு அளிக்க தயாராகி வருகிறார்கள். இதுபோல் மேலும் சிலரும் வருவார்கள். ஆந்திர முதல் அமைச்சராகி விட வேண்டும் என்று அவருக்கு கனவு உள்ளது. அது ஒருபோதும் நடக்காது. பஞ்சாயத்து தலைவராக கூட அவரால் வர முடியாது என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

இந்த முறைப்பாடு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

மனதை தொடும் கதைகள் தேடும் த்ரிஷா

‘மாஸ்டர்’ மகாராஷ்டிராவில் படுதோல்வி

ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ரூ.60 லட்சம் கேட்ட இலியானா