(UTV|COLOMBO) – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம், 2020 ஆம் ஆண்டுக்கான ஜின்னா புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரியுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் இரண்டு பாடங்களில் ‘A’ தர சித்திகளைப் பெற்றவர்களிடமிருந்தே கோரப்பட்டுள்ளன.
இந்தப் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 2 மணி வரையில், இலக்கம் 42, புல்லெர்ஸ் ஒழுங்கை, கொழும்பு 7 எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் அலுவலகத்தில், கையளிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் www.pakistanhc.lk எனும் உயர்ஸ்தானியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஜின்னா புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன் கையளிக்கப்பட்ட வேண்டுமென, அந்த உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Applications are invited for #JinnahScholarships. Last date for receipt of applications is 31st January, 2020. pic.twitter.com/5midBq6hUM
— Pakistan High Commission, Colombo (@PahicColombo) December 29, 2019