வணிகம்

நுவரெலியாவில் மரக்கறித் தட்டுப்பாடு

(UTV|NUWARAELIYA)- அண்மையில் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால் நுவரெலியாவில் விவசாயச் செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் மரக்கறிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் படி,1 கிலோகிராம் கோவா 115 தொடக்கம் 120 ரூபா, உருளைக்கிழங்கு 140 தொடக்கம் 145 ரூபா, பீற்றூட் 170 தொடக்கம் 180 ரூபா, சலாது 320 ரூபா, கரட், லீக்ஸ் ஆகியன 330 ரூபா, முள்ளங்கி 70 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

சுற்றுலா அபிவிருத்தி வலயமாக நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய திட்டம்

சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு