உள்நாடு

கைப்பேசிகளை பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO) – இந்தக் காலப்பகுதிகளில் தங்களது கையடக்க தொலைபேசிகளுக்கு கிடைக்கப்பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அறியப்படாத இலக்கங்களிலிருந்து இவ்வாறான குறுந்தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவ்வாறாக வரும் குறுந்தகவல்களில் பெறுமதியான பரிசில்கள் வாடிக்கையாள்கள் வென்றிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த பெறுமதியான பரிசை பெற்றுக்கொள்ள ஒரு தொகை பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான குறுந்தகவல்கள் கிடைக்கப்பெறுவோர் தமது தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் எனவும் அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு இலக்கங்களுக்கு பணம் வைப்பு செய்வதையும் தவிர்க்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான குறுந்தகவல்கள் தொடர்பில் தமது சங்கத்திற்கு அறிவிக்குமாறும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கோதுமை மாவின் விலை உயர்வு

 சீ ஷெல்ஸ்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு