(UTV|COLOMBO) – ஹோட்டல்களின் தரத்தை அதிகரிப்பதன் நோக்கமாக கொண்டு நாட்டில் உள்ள சகல சுற்றுலா ஹோட்டல்களையும் எதிர்வரும் 3 மாதத்திற்குள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 20 ஆயிரம் சுற்றுலா ஹோட்டல்கள் காணப்பட்டாலும் அவற்றுள் இரண்டாயிரம் ஹோட்டல்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.