உள்நாடு

Missed Call தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – வௌிநாடுகளிலிருந்து அலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் மிஸ்ட் கோல் (Missed Call) தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான அழைப்புகள் தொடர்பில் 1700 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் வாயிலாக அறியத்தருமாறு குறித்த ஆணைக்குழு கூறியுள்ளது.

வௌிநாடுகளுக்குரிய இலக்கங்களிலிருந்து இருந்து கடந்த சில நாட்களாக அலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெறுவதாகவும், யாரும் உரையாடாத நிலையில், மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தினால் அழைப்பானது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் மோதி கோர விபத்து – நான்கு பேர் காயம்

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு