உள்நாடு

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை(14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் கொழும்பு 01, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 02, 09 பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

 களுத்துறை மாணவி விற்கப்பட்டாரா? இல்லையா?

ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

சாரதி அனுமதிப்பத்திரம் பெற புதிய பரிசோதனைக்கான!