சூடான செய்திகள் 1

ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய விசேட குழு

(UTV|COLOMBO) – மீனகயா கடுகதி ரயில் இயந்திரம் உள்ளிட்ட 6 ரயில் பெட்டிகள் அவுக்கன உப ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நால்வரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் வரையில் நிறைவு பெறாத நிலையில் உள்ளதால் குறித்த தண்டவாளத்தில் ரயில் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், திருகோணமலை – மட்டக்களப்பு வரையில் தடைப்பட்டிருந்த ரயில் சேவை இன்றிரவு வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

மரண தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மனு

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதில் தாமதம்

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]