சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றில்

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் இன்று(23) முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இன்று பிற்பகல் ஊடக சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கான வழிமுறைகளும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடுத்து கடந்த மே மாதம் 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் குறித்த விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் ஐந்தே நிமிடங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி

சந்திரிகாவுக்கு பிரான்சின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது

முற்றாக கலைந்தது பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழாம்