சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளை

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறித்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் ஜனாதிபதி, பிரதமர், புலனாய்வு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் வழங்கியதை அடுத்து அனைத்து சாட்சிப்பதிவுகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவுக்குழு அறிவித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடுத்து கடந்த மே மாதம் 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் குறித்த விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று

டெக்னிகல் சந்திப் பகுதியில் வாகன நெரிசல்