(UTV|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20) பிற்பகல் ஜப்பானுக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் 126 ஆவது பேரரசராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பேரரசர் நருஹிடோ, பேரரசி மசாகோவுடன் பாராம்பரிய உடை அணிந்து இம்பிரியெல் மாளிகையின் பிரதான மண்டபத்திற்கு வருகை தருவதிலிருந்து முடிசூட்டு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரச முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இடம்பெறும் அணிவகுப்பு, அண்மையில் ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியினால், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.