வகைப்படுத்தப்படாத

குழந்தைகள் வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் சரும பிரச்சனை

(UTV|COLOMBO) – குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். ஆனால் குறிபிட்ட நேரத்திற்கு அதிகமான நேரம் வெயிலில் விளையாடினால் சரும பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். அப்போது தான் வைட்டமின் டி குறைபாடு வராமல் இருக்கும். காலை வெயிலும் மாலை வெயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஏற்றவை. 12 மணி முதல் 3 மணி வரையிலான வெயிலைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

பப்பாளி, ஆரஞ்சு, கேரட், பரங்கிக்காய், தக்காளி போன்ற அனைத்தும் விட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நெல்லிக்காய், சாத்துக் குடி, பிரக்கோலி, கீரை போன்றவையும் இதே போன்று உதவும்.

இவை தவிர சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் விட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வெயிலில் விளையாடி விட்டு வந்ததும் குழந்தைகளை உடலில் அழுக்கும் வியர்வையும் நீங்கக் குளிக்கச் செய்ய வேண்டும்.

உடலில் வியர்வை தங்கினால் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும். அதன் மூலம் தேமல், படர் தாமரை போன்றவை வரலாம். குளித்ததும் உள்ளாடை முதல் உடை வரை எல்லாவற்றையும் மாற்றச் சொல்ல வேண்டியதும் அவசியம்.

Related posts

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பு..

பதுளையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஆடைகள்!!

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை: திட்டமிடப்பட்ட செயலா?