சூடான செய்திகள் 1

வனவிலங்கு நிதியத்தை மூட அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) – அறக்கட்டளைச் சட்டத்தின் ஒதுக்கீட்டிற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட வனவிலங்கு நிதியத்தின் மூலம் வனஜீவராசிகளின் பாதுகாப்பிற்காக தற்போது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் வனவிலங்கு நிதியத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், சேவையில் இருந்து விலகியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களுக்கு இழப்பீடு மற்றும் பணிக்கொடையை வழங்குவதற்கும் இழப்பீட்டைப் பெற்று சேவையிலிலிருந்து வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத அதன் பணியாளர், அங்கத்தவர்களுக்கு அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்த வகையில் இணைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதியத்திற்கு சொந்தமான ரந்தெனிகல பயிற்சி மத்திய நிலையத்தை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பயிற்சி நிலையமாக தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க அனுமதி

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் இன்று மீண்டும் ஆரம்பம்