சூடான செய்திகள் 1வணிகம்

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

(UTV|COLOMBO) – தீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பணமாக தலா 15,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேயிலை சபையூடாக குறித்த இந்த முற்பணம் வழங்கப்படுமென, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மேலும் கம்பனிகள் மூலமாகவும் தொழிலாளர்களுக்குப் 10,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

Related posts

மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த 14 நபர்கள் கைது!

இ.போ.சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன இராஜினாமா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று