வகைப்படுத்தப்படாத

மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் பொலிசார் 14 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம் உலவும் பகுதியான மெக்சிகோ நாட்டின் மிசோகான் மாநிலத்தில் உள்ள அகுயிலா நகரத்தில் பொலிசார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது சாலையோரம் மறைந்திருந்த மர்ம நபர்கள் பொலிஸ் வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சூடு மேற்கொண்டதில் பொலிஸ் வாகனங்கள் தீப்பிடித்து வெடித்தன. இதில் இரு வாகனங்களிலும் இருந்த 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 போலீசார்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Showers expected in several places today

இந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள்-பிரதமர் மோடி

காலநிலை