சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல்; அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேர்தல்கள் செயலகம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்பொழுதுள்ள தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கபட்ட கடவுச்சீட்டு, வாகன அனுமதிப்பத்திரம், வயதானவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை முதலான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கொண்டிராதவர்களுக்கு இந்த தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் ரசிய பீரீஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு

குருணாகல் பேரணி ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி இல்லை – பொன்சேகா

நாட்டை சுட்டெரிக்கும் சூரியன்-சில பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிப்பு