சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நிறைவு

(UTVNEWS | COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி ஆரம்பமானது.

இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் சுமார் 72 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

சர்வதேச சமுத்திர மாநாடு இன்றும் நாளையும்

மீன் விற்பனைக்கு கையடக்க தொலைபேசியில் செயலி