வகைப்படுத்தப்படாத

எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வருடம்தோறும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2018 ஆண்டு பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரிட்ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது

Related posts

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி