சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

(UTV|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.

வாக்காளர்கள் தமது வாக்குகளை மாலை 4 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றதுடன், தேர்தலில் 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, தேர்தலுக்காக எல்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்தனர்

எஸ்.பீ.நாவின்ன சஜித்திற்கு ஆதரவு