சூடான செய்திகள் 1

கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா

(UTVNEWS|COLOMBO) – இலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று(07) கொழும்பில் இடம்பெற்றது.

இந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் ஈடுபட்டிருப்போரின் தேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் இணையத்தள வசதிகளை வழங்கும் நிறுவனமாக தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பு விளங்குகின்றது.

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துவதும் இணையத்தின் ஊடாக வெளி உலகத்துடன் அந்நிறுவனங்களை நெருக்கமடையச் செய்வதும் இதனூடாக மேற்கொள்ளப்படுகின்றது.

கல்வியை மேம்படுத்துதல் மற்றும் அதனை தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பாக ஸ்தாபிப்பதற்கு பங்களிப்பு வழங்கியோருக்கு ஜனாதிபதி அவர்களினால் பாராட்டு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா, தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன ஆகியோர் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு புத்திஜீவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

பிரதமர் இன்று(22) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்