சூடான செய்திகள் 1

நாட்டு மக்களுக்கு தமது கொள்கைகளை விளக்கவுள்ள சஜித், கோட்டாபய, அநுரகுமார

 (UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒரே மேடையில் நாட்டு மக்களுக்கு தமது கொள்கைகளை விளக்கவுள்ளனர்.

பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்த கூட்டம் இன்று மாலை ஆரம்பமாகியுள்ளது.

இதுதொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து வெளியிடுகையில்,

கடந்த தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர்த்து ஏனைய அனைத்து வேட்பாளர்களும் இணைந்து 138000 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். அதன் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு மாத்திரம் ஒரே மேடைக்கு அழைப்பதென எமது குழு தீர்மானித்தது.

இன்று நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மக்களால் வழங்கப்பட்ட கேள்விகளே வேட்பாளர்களிடம் கேட்கப்படவுள்ளன. இந்நிகழ்வை நாட்டின் அனைத்து மக்களும் தொலைக்கட்சிகளில் பார்வையிட முடியும். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிப்பரப்பப்படும்.

ஆகவே இந்நிகழ்வை அனைவரும் பார்வையிட்டு நாட்டின் தலைவராக யார் வரவேண்டுமென்பதை மக்கள் முடிவுசெய்ய வேண்டும். தேர்தல் தொடர்பாக மக்களை விழிப்புணர்வுப்படுத்தும் பணிகளை பெப்ரல் அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது” என மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதான வேட்பாளர்கள் மூவரும் இங்கு உரையாற்றுவதாக பெப்ரல் அமைப்புக்கு அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்- ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலை-சபாநாயகர் கவலை

இன்று நள்ளிரவு முதல் முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை