சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – தகவல் வழங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

அதன்படி, குறித்த தகவல்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, 1ம் மாடி, ப்ளோக் N-5,பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் கொழும்பு – 07 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என குறித்த ஐவர் கொண்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி அதபத்து லியனகே பந்துல குமார மற்றும் ஓய்வூதிய அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரீ ஆகியவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

எதிர்ப்பு பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..