சூடான செய்திகள் 1

ஐந்தாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு – இன்று பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த 24ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில் தொழிற்சங்கம் உட்பட மேலும் இரண்டு தொழிற்சங்கங்களுடன் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், உரிய தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆனமாலு ரங்க கொலை : குடு ரொஷானின் சகோதரன் கைது

இலங்கை- பிலிப்பைன்ஸிற்கும் இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து

அமைச்சர்களின் அரச நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு