சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டி கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – வெல்லம்பிட்டி பகுதியிலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்தின் காரணமாக நான்கு கடைகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய காவல்துறை குற்றவியல் விசாரணை அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரச துறைக்கு இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் பத்தாயிரம் பேர் இணைப்பு

UPDATE-ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் கோட்டா…

மலிங்கவுக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது இலங்கை அணி