சூடான செய்திகள் 1

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு-இம்ரான்கான்

(UTVNEWS COLOMBO)– இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான்கான் மேலும் தெரிவிக்கையில் கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள், 9 இலட்சம் இராணுவ வீரர்களால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள், கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள். வைத்தியசாலைகள் இயங்கவில்லை. செய்திகள் மூடி மறைக்கப்படுகின்றன. என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related posts

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நாளை

அதிக வெப்பமான வானிலை…