சூடான செய்திகள் 1

இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு, இன்று(25) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சட்டத்துறைக்கு சம்பளத்தை அதிகரித்து அரச சேவையில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் தலைவர், டொக்டர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது என இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்…

அமைச்சரவை அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

ஶ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் மே 31 ம் திகதிக்கு முன்