(UTVNEWS|COLOMBO) – நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ, பத்தேகம ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தொட்டை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை – பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.