சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்றன கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிவாரண நடவடிக்கைகளுக்காக, முப்படையினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் இன்று(24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2 மாதங்களுக்குள் அதிக மழையுடனான வானிலை தொடர்வதற்கான சாத்தியம் நிலவுவதன் காரணமாக, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்

பாதீடு தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில்

அமெரிக்காவில் இலட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு