(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவிய குற்றச்சாட்டில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் I.N.ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.