வகைப்படுத்தப்படாத

முக அழகை அதிகரிக்க உப்பை எப்படி பயன்படுத்தலாம்

(UTVNEWS|COLOMBO) – நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

உப்பு சரும அழகை மட்டுமின்றி, தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும்.

அந்தவகையில் ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்துகொள்வோம்.

# 1 மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

# 1 மேசைக்கரண்டி உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து, ஈரமான முகத்தில் அவற்றைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.

# தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 மேசைக்கரண்டி தேனில், 2 மேசைக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

# ஒரு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி கடலை மாவு, 2 மேசைக்கரண்டி பால் மற்றும் 1 மேசைக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் தேய்த்து கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Related posts

குழந்தைகளின் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறியாவிட்டால் ஏற்படும் விளைவு

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு

திடீர் இராஜினாமா செய்த ஈரான் வெளியுறவு அமைச்சர்