சூடான செய்திகள் 1

வாக்காளர் இடப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை 19 உடன் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க முடியும்.

மின்அஞ்சல் மூலமும் இவற்றை சமர்ப்பிக்க முடியும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கே.யூ. சந்திரலால் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!

70 பேருக்கு இடமாற்றம்…