(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(12) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரை பலத் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகாகக் காணப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)