(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியா குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்கள் அல்லது காயங்களுக்குள்ளானோர் ஆகியோர் உட்பட அனைவருக்கும் அவுஸ்திரேலியா டொலர் 75,000 வரை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இலங்கை ரூபாயின் படி 90இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.