சூடான செய்திகள் 1

நான்கு மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS|COLOMBO) – நாடளாவிய ரீதியில் உள்ள சகல மருத்துவமனைகளிலும் 4 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை(10) காலை எட்டு மணி முதல் நண்பகல் 12 மணி வரை அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேவையாளர் தட்டுப்பாடு, இடமாற்றம், பதவி உயர்வுக்கேற்ற கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த பணிப்புறக்கணிப்பின் போது, கொழும்பு தேசிய மருத்துவமனை, களுபோவில போதனா மருத்துவமனை, கராபிட்டிய போதனா மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை உள்ளடங்கலாக 30 மருத்துவமனைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாக அகில சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சீனா அரசு வழங்கிய புதிய நன்கொடை

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்