(UTVNEWS | COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தி மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் சபை இன்று(08) அநுராதபுரத்தில் ஆரம்பாகவுள்ளது.
‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் பல மாவட்டங்கள் இந்த மக்கள் சபையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்போது, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி விவாதம் ஒன்றை நடத்த எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.