விளையாட்டு

இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

நேற்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி,  இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 125 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 30 ஒட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 24 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 126 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக அணித்தலைவர் டிம் சௌத்தி ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க 5 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார் இந்நிலையில் தனது 100ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளார் லசித்.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளதால் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Related posts

மிக்கி ஆர்தர் இராஜினாமா

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ்…